
மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் நகரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பவியல் கல்லூரி புதிய அதிநவீன ட்ரோன் ஒன்றை வடிவமைத்து உள்ளது.
இந்த திட்டத்தில் என்ட்யூர் ஏர் என்கிற தனியார் நிறுவனமும் பங்கு வகித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்ரோன் பெட்ரோலில் இயங்க கூடியது 5 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது, சுமார் 11500 அடி உயரம் வரை செல்லும் திறன் கொண்டதாகும்.
ஐஐடி கான்பூர் பேட்டரியில் இயங்கும் மேம்பட்ட வடிவத்தை உருவாக்கி வருகின்றனர் இது மேலும் அதிக உயரத்திற்கு செல்லும் என கூறப்படுகிறது.
இந்த ட்ரோனில் நேவிக் மற்றும் ஜிபிஎஸ் வழிகாட்டி அமைப்புகள் இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.