Day: May 25, 2021

புதிய தானியங்கி மோர்ட்டார் அமைப்புகளை இந்திய எல்லையோரம் பயன்படுத்த சீனா திட்டமா ??

May 25, 2021

சமீபத்தில் சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகத்தின் ஒர் பிரிவான ஸின்ஜியாங் ராணுவ பிராந்தியத்தில் புதிய தானியங்கி மோர்ட்டார் அமைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் சீன ராணுவம் இந்த தானியங்கி மோர்ட்டார் அமைப்புகளை கொண்டு ஒரு தாக்குதல் பயிற்சியையும் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வல்லுநர்கள் கூறும்போது இந்த தானியங்கி மோர்ட்டார் அமைப்புகள் சீன படைகளுக்கு பெரும் பலமாக அமையும் காரணம் பெரிய பிரங்கிளை போலில்லாமல் எளிதாக கொண்டு சென்று தாக்க முடியும் எனவும், இத்தகைய ஆயுதங்களை கொண்டு […]

Read More

இந்திய விமானப்படையில் மற்றொரு புதிய உயரத்தை தொட்ட பெண் அதிகாரி !!

May 25, 2021

இந்திய விமானப்படையில் ஸ்க்வாட்ரன் லீடர் அந்தஸ்து கொண்ட அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஆஷ்ரிதா வி ஒலெட்டி. இவர் சமீபத்தில் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான சோதனை பொறியாளராக மதிப்புமிக்க இந்திய விமானப்படை சோதனை விமானி பயிற்சி பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். விமான சோதனை பொறியாளர்கள் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட வானூர்திகளின் சோதனை ஒட்டத்தை வழிநடத்தி கண்காணித்து தகவல்களை சேகரித்து குறைகளை களைந்து விமானத்தை பயன்பாட்டிற்கு ஏற்ற விமானமாக மாற்றும் முக்கிய பணியை […]

Read More

விரைவில் DRDO மின்காந்த பீரங்கியின் சோதனை !!

May 25, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒரு மின்காந்த பீரங்கியை உருவாக்கி வருகிறது இதன் சோதனை விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்காந்த பிரங்கியானது அதிக வோல்டேஜ் மின்சாரம், கபாசிடர், இன்டக்டர்கள் மற்றும் தண்டவாள அமைப்புகளை சேர்த்தது, ஏற்கனவே 10 மெகா ஜூல் திறனுள்ள பிரங்கி மற்றும் 100 மெகா ஜூல் திறனுள்ள கபாசிடர்கள் தயாரிக்கப்பட்டு விட்டன. இந்த பிரங்கியானது துவக்க வேகத்திற்காக நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தும், பின்னர் மின்காந்த தொழில்நுட்பம் மூலமாக […]

Read More

டி’ஆர்க்-21 பன்னாட்டு கூட்டு பயிற்சி அமெரிக்கா ஜப்பான் ஃபிரான்ஸ் ஆஸ்திரேலியா பங்கேற்பு !!

May 25, 2021

கடந்த 11ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை கிழக்கு சீன கடல் பகுதியிலும் ஜப்பானிலும் வைத்து மிகப்பெரிய பன்னாட்டு கூட்டு பயிற்சி நடைபெற்றது இதில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. டி’ஆர்க்-21 என பெயரிடப்பட்டுள்ள இந்த பன்னாட்டு கூட்டு போர் பயிற்சிகள் சீன ஆதிக்கத்திற்கு எதிரானவை ஆகும், இந்த போர் பயிற்சிகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய கடற்படை தளமான சஸிபோவிலும், ஜப்பானிய தரைப்படை […]

Read More

முதல் அடி ஆஸ்திரேலியாவுக்கு தான், கடுமையாக எச்சரித்த சீனா !!

May 25, 2021

சீன ஆதரவாளர்கள் பலர் ஆஸ்திரேலியா தைவான் தொடர்பான போரில் சீனாவுக்கு எதிராக செயல்பட்டால் முதல் அடி விழும் எனவும் சீன இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் ஆஸ்திரேலியாவை தாக்க முடியும் என கூறி வருகின்றனர். இந்த கருத்துகளை சீன அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் தனது பத்திரிக்கையில் அச்சிட்டுள்ளது, அதுவும் குறிப்பாக அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கிழக்கு சீன கடலில் போர் பயிற்சிகளை முடித்த பின் இப்படி நடந்துள்ளது. ஆஸ்திரேலிய ராணுவம் வலுவற்றது, […]

Read More

காங்கோவில் எரிமலை வெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள் !!

May 25, 2021

ஆஃப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு படையில் இந்திய ராணுவ பிரிவு ஒன்று அமைதிகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள நியாரகோங்கோ எரிமலை வெடித்து எரிமலை குழம்புகளை கக்கியது இதனால் அந்த மலையை சுற்றி வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பேராபத்தில் சிக்கி கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள மொத்த ஐ.நா அமைதிப்படைக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட இந்திய ராணுவ வீரர்களும் விரைந்து சென்றனர். இந்திய […]

Read More