Breaking News

Day: May 23, 2021

மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகளுடன் பயங்கர மோதல் !!

May 23, 2021

நேற்று மாலை அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மியான்மர் எல்லையோரம் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இதில் NSCN அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளது 1 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரர் வீரமரணம் அடைந்தார் இருவர் காயமடைந்தனர். அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கொண்டு காலை 8.30 மணியளவில் அருணாச்சல பிரதேச மாநிலம் சங்க்லாங் மாவட்டத்தில் இந்த ஆபரேஷன் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

எனது மகனை இழந்துவிட்டேன் தயவுசெய்து மிக்21 விமானங்களை விலக்குங்கள் என கோரிக்கை விடுத்த விமானியின் தந்தை !!

May 23, 2021

சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் படைதளத்தில் இருந்து இரவுநேர ரோந்து பணிக்கு சென்ற மிக் 21 பைசன் ரக விமானம் மோகா அருகே விபத்தில் சிக்கியது,இந்த விபத்தில் சிக்கி விமானப்படை அதிகாரியும் விமானியுமான ஸ்க்வாட்ரன் லீடர் அபினவ் சவுத்ரி துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தார். இதை பற்றி பேசிய விமானியின் தந்தை திரு. சத்யேந்திர சவுத்ரி எனது ஒரே மகனை இழந்துவிட்டேன் ஆனாலும் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன் என்னை போல வேறு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இழக்காமல் இருக்க […]

Read More

13 நக்சல்களை வேட்டையாடிய மஹாராஷ்டிர அதிரடிப்படை வீரர்கள் !!

May 23, 2021

நேற்று விடியற்காலையில் மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் அம்மாநில காவல்துறையின் சிறப்பு நக்சல் ஒழிப்பு படையான சி60 அதிரடி படையினர் ஆபரேஷன் ஒன்றை நடத்தினர். இந்த ஆபரேஷனில் நக்சல்களை அதிரடிப்படையினர் நெருங்கிய போது சுதாரித்து கொண்ட நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்த துவங்கினர். உடனடியாக விரைவாக செயல்பட்ட அதிரடி படை வீரர்கள் கடுமையான பதில் தாக்குதல் நடத்தினர் இதில் 13 நக்சலைட்டுகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். அதிகாலை 4 மணிக்கு துவங்கிய என்கவுண்டர் 5 மணி வரை […]

Read More

அர்மீனியா அஸர்பெய்ஜான் வீரர்கள் இடையே மோதல் மீண்டும் பதட்டம் அதிகரிப்பு !!

May 23, 2021

நேற்று அர்மீனியா நாட்டின் சுயுனிக் பிராந்தியத்தில் உள்ள கோஸ்நவார் கிராமத்தில் எல்லையை தாண்டி அஸர்பெய்ஜான் ராணுவ வீரர்கள் உள்நுழைந்தனர். சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு உள் புகுந்த அஸர்பெய்ஜான் ராணுவ வீரர்களை விரைந்து வந்த அர்மீனியா ராணுவத்தினர் எதிர்கொண்டு திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். அப்போது அஸர்பெய்ஜான் வீரர்கள் அந்த பகுதி தங்களுக்கு உரியது என கூறி பிரச்சினை செய்யவே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு வீரர்களும் கடுமையாக மோதி கொண்டனர், இதனையடுத்து அஸர்பெய்ஜான் வீரர்கள் பின்வாங்கினர். இந்த சண்டையில் […]

Read More

துர்கா-2 லேசர் ஆயுதம்: ஒரு சிறப்பு பார்வை !!

May 23, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது துர்கா-2 எனும் அதிநவீன லேசர் ஆயுதத்தை வடிவமைத்து வருகிறது. இந்த துர்கா-2 லேசர் ஆயுதமானது இலகுவாகவும், 100 கிலோவாட் திறனுடன் கப்பல்கள் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இருக்கும். இந்த அமைப்பில் LGV மற்றும் ASV மேலும் இந்த அமைப்பு ஏற்கனவே தளவாடங்களில் இணைக்கப்பட்டு சோதிக்கப்பட்டு உள்ளதாகவும் 800மீட்டர் தொலைவுக்கு தாக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது. ஆதித்தயா எனும் தளவாடத்தில் இது இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு உள்ளது, அதன் […]

Read More

நைஜீரியாவுக்கு போர் விமானம் விற்பனை செய்த பாகிஸ்தான் !!

May 23, 2021

பாகிஸ்தான் மூன்று JF-17 ரக போர் விமானங்களை நைஜீரிய விமானப்படைக்கு அந்நாட்டில் உள்ள மகுட்ரி படைத்தளத்தில் வைத்து வழங்கியது. இந்த விழாவில் பாகிஸ்தான் சார்பாக கலந்து கொண்ட பாக் விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் சயத் நோமன் அலி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் இந்த நிகழ்ச்சி பாகிஸ்தான் விமான தயாரிப்பு வயலாற்றில் ஒர் புதிய அத்தியாயம் எனவும் இது நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நட்புறவுக்கு அடையாளம் என்றார். இந்த மூன்று JF-17 ரக போர் விமானங்களும் […]

Read More