13 நக்சல்களை வேட்டையாடிய மஹாராஷ்டிர அதிரடிப்படை வீரர்கள் !!

  • Tamil Defense
  • May 23, 2021
  • Comments Off on 13 நக்சல்களை வேட்டையாடிய மஹாராஷ்டிர அதிரடிப்படை வீரர்கள் !!

நேற்று விடியற்காலையில் மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் அம்மாநில காவல்துறையின் சிறப்பு நக்சல் ஒழிப்பு படையான சி60 அதிரடி படையினர் ஆபரேஷன் ஒன்றை நடத்தினர்.

இந்த ஆபரேஷனில் நக்சல்களை அதிரடிப்படையினர் நெருங்கிய போது சுதாரித்து கொண்ட நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்த துவங்கினர்.

உடனடியாக விரைவாக செயல்பட்ட அதிரடி படை வீரர்கள் கடுமையான பதில் தாக்குதல் நடத்தினர் இதில் 13 நக்சலைட்டுகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அதிகாலை 4 மணிக்கு துவங்கிய என்கவுண்டர் 5 மணி வரை நீடித்தது, கொல்லப்பட்ட நக்சல்களிடம் இருந்த ஆயுதங்களை அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி பேசிய காவல்துறை அதிகாரிகள் நக்சலைட்டுகள் மிக பெரிய தாகாகுதல் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆபரேஷன் நடைபெற்றதாக கூறினர்.