Breaking News

Day: May 3, 2021

ஐஐடி கரக்பூர் வடிவமைத்த அதிநவீன ட்ரோன் !!

May 3, 2021

மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் நகரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பவியல் கல்லூரி புதிய அதிநவீன ட்ரோன் ஒன்றை வடிவமைத்து உள்ளது. இந்த திட்டத்தில் என்ட்யூர் ஏர் என்கிற தனியார் நிறுவனமும் பங்கு வகித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோன் பெட்ரோலில் இயங்க கூடியது 5 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது, சுமார் 11500 அடி உயரம் வரை செல்லும் திறன் கொண்டதாகும். ஐஐடி கான்பூர் பேட்டரியில் இயங்கும் மேம்பட்ட வடிவத்தை உருவாக்கி வருகின்றனர் இது மேலும் […]

Read More

இந்தியாவுக்கு தென்கொரிய இலகுரக டாங்கி ??

May 3, 2021

தென்கொரிய நிறுவனமான ஹான்வஹா இந்திய தரைப்படைக்கு இலகுரக டாங்கிகளை வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது. இந்த இலகுரக டாங்கியானது கே21 சேஸ்ஸியின் மேல் 105 மில்லிமீட்டர் துப்பாக்கி பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் இந்திய தரைப்படை சுமார் 350 இலகுரக டாங்கிகளை வாங்க அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்திய தரைப்படை 25 டன்களுக்கு மிகாமல் பல்திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இலகுரக டாங்கியை பெற விரும்புகிறது. இந்த 350 டாங்கிளும் படிப்படியாக படிப்படியாக பல […]

Read More

சீன கடற்படைக்கு இந்திய பெருங்கடலில் ஆப்பு !!

May 3, 2021

இந்தியாவுக்கு சுமார் 6 பி8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை விமானங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் இயங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க காங்கிரஸுக்கு தகவல் அளித்துள்ளது. இந்த 6 புதிய மேலதிக பொசைடான் விமானங்கள் சுமார் 2.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியா 8 பொசைடான் விமானங்களை சுமார் 2.2 […]

Read More

ஆஃப்கானிஸ்தான்: அமெரிக்க படைவிலக்க காலக்கெடு அதிகரிப்பு காரணம் என்ன ??

May 3, 2021

டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மே மாதம் அனைத்து வெளிநாட்டு படைகளும் படைகளை விலக்கி கொள்வதாக ஒப்பு கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கடந்த மாதம் பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்ட பிறகு, ஆஃப்கானிஸ்தானில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க படைகள் முற்றிலுமாக படை விலக்க நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது. அமெரிக்கா இந்த படை விலக்க காலக்கெடுவை நீட்டிப்பு செய்தது […]

Read More

இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஆக்சிஜன் கன்டெய்னர்கள்

May 3, 2021

நாடு முழுதும் கொரானாவுக்கு எதிரான போரில் இந்திய விமானப்படை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஆக்சிஜன் கன்டெய்னர்களை உள்நாட்டுக்குள்ளும், வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்குள் கொண்டு சென்று வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஜெர்மனியின் ஃப்ராங்புர்ட் நகரில் இருத்து கிரையோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னர்களை ஹின்டன் தளத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும மற்றும் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் பிரிஷ் நோர்டன் தளத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது. இது தவிர உள்நாட்டுக்குள்ளும் […]

Read More