கடற்படை போர் விமான மாதிரி சோதனை !!

விமான மேம்பாட்டு முகமையின் பொறியாளர்கள் கடற்படைக்கான புதிய போர் விமானத்தின் மாதிரி வடிவத்தை சோதனை செய்துள்ளனர்.

டெட்பஃப் எனப்படும் கடற்படை இரட்டை என்ஜின் போர் விமானமானது 2032 முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள மிக்29-கே போர் விமானங்களுக்கு மாற்றாக அமையும்.

ஆரம்பத்தில் இரண்டு வடிவங்களை ஏ.டி.ஏ கடற்படைக்கு காண்பித்தது, அதில் கடற்படை தேர்வு செய்த வடிவம் ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது தற்போது அதுவே காற்று சுரங்கத்தில் சோதிக்கப்படுகிறது.

இந்த விமானமானது ஆம்கா விமானத்தின் பல அம்சங்களை உள்ளடக்கி இருக்கும் மேலும் இது 4+++ தலைமுறை விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.