சீனா தாக்கினால் கடைசி நாள் வரை போரிடுவோம்- தைவான்
சீனா தாக்கினால் நாடு இறுதிவரை போராடும் என்று தைவானின் வெளியுறவு அமைச்சர் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.நாட்டின் வெளியுறவு மந்திரி ஜோசப் வு கூறுகையில் பிராந்தியத்தில் அதிகரித்த சீனாவின் இருப்புக்கு மத்தியில் சீனாவிலிருந்து ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.
சமீபத்திய வாரங்களில், தைவான் தீவின் அருகே விமானம் தாங்கி கப்பல்கள் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தைவான் மீது சீனா இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது. சீனா தைவானை தனது சொந்த பிரதேசமாகக் கூறி வருகிறது.
தைவான் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் கிட்டத்தட்ட தினமும் சீன விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளதாக தைவான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தைவான் தொடர்ந்து தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.மேலும் இராணுவத்திற்காக அதிக செலவும் செய்து வருகிறது.