விசாக் மற்றும் விக்ராந்த்; எப்போது படையில் இணையும் ?

  • Tamil Defense
  • April 28, 2021
  • Comments Off on விசாக் மற்றும் விக்ராந்த்; எப்போது படையில் இணையும் ?

இந்திய கடற்படைக்கு வலுவூட்டும் விதமாக தற்போது வெகு நாட்களாக கட்டப்பட்டு வரும் 45000 டன்கள் எடையுடைய விக்ராந்த் மற்றும் விசாகப்பட்டிணம் வகை ஸ்டீல்த் வழிகாட்டு ஏவுகணை போர்க்கப்பல் இந்த வருட இறுதியில் படையில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படையில் இணைக்கப்படும் முன் இந்த இரு கப்பல்களும் கடற்படையால் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும்.இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட முதல் பகுதியில் கப்பல்கள் அதிகாரப்பூர்வமாக படையில் இணைக்கப்படும்.

இதற்காக Cochin Shipyard Ltd ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை கடைசி கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த உள்ளது.அதே போல Mazegaon Dockyard நிறுவனம் விசாக் கப்பலை டிசம்பர் 4க்கு முன்பே கடற்படைக்கு வழங்க உள்ளது.

இது தவிர இரண்டாவது அரிகந்த் ரக நீர்மூழ்கியான அரிகத்தும் இந்த வருடம் படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.