
19ஆவது “வருணா” இந்தோ-ஃபிரெஞ்சு கடற்படை கூட்டு போர் பயிற்சி துவங்கியது, இதற்கு “வருணா-2021” என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த போர் பயிற்சியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, கடற்பரப்பு மற்றும் வான் எதிர்ப்பு தாக்குதல் பயிற்சி, ஹெலிகாப்டர் மற்றும் விமான பயிற்சி, சப்ளை பயிற்சிகள் போன்றவை நடைபெற உள்ளன.
இந்திய கடற்படை சார்பில் ஐ.என்.எஸ்.கொல்கத்தா, ஏவுகணை ஃப்ரிகேட்டுகளான ஐ.என்.எஸ். டார்காஷ் மற்றும் ஐ.என்.எஸ் தல்வார், டேங்கரான ஐ.என்.எஸ். தீபக், 1 பி8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம், 1 கல்வரி ரக நீர்மூழ்கி.
ஃபிரெஞ்சு கடற்படை சார்பில் சால்ஸ் டி கால் விமானந்தாங்கி கப்பல், ஹோரைஸான் ரக வான் பாதுகாப்பு நாசகாரி கப்பல் ஷெவாலியர் பால், அக்விடேன் ரக ஃப்ரிகேட்டான ப்ராவென்ஸ் போன்றவை இதில் பங்கு பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.