
‘நாங்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ‘: அதிகரித்து வரும் பதட்டத்தின் மத்தியில் சீனாவை எச்சரிக்கும் அமெரிக்க கடற்படை
அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்களுக்கும் சீன கடற்படைக்கும் இடையில் அண்மையில் கடலில் ஏற்பட்ட சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சீனக் கடற்படையின் லயோனிங் போர்க்கப்பல்கள் குழுவை ஒட்டியவாறு அமெரிக்க கடற்படையின் வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட கப்பலான USS Mustin, சென்ற புகைப்படத்தை கடந்த ஞாயிறு அன்று அமெரிக்க கடற்படை வெளியிட்டது.இது சீனர்களுக்கு அமெரிக்கா விடும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
கிழக்கு சீனக் கடல் பகுதியில் எங்கோ தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.கப்பலின் கேப்டன் கமாண்டர் ராபர்ட் பிரிக்ஸ் மற்றும் துணை கமாண்டர் ரிச்சர்டு ஸ்லை ஆகிய இருவரும் சில ஆயிரம் மீட்டர் தூரத்தில் இருந்து சீனப் போர்கப்பல்கள் குழுவை பார்த்த வண்ணம் இருக்கும் புகைப்படம் வெளியானது.
சீனக் கப்பல்களுக்கு மிக அருகே சென்று அவர்களின் நடமாட்டத்தை நோட்டமிட்டதன் மூலம் அமெரிக்கா சீனாவுக்கு “
நாங்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்பதை புரிய வைத்துள்ளது.