
இந்தோனேசிய கடற்படையின் கே.ஆர்.ஐ நங்காலா என்ற நீர்மூழ்கி சில நாட்களுக்கு முன்னர் பாலி தீவு அருகே கடலடியில் மாயமானது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த கப்பலை கண்டுபிடித்து 53 வீரர்களை மீட்க தீவிர முயற்சி நடைபெற்று வரும் நிலையில்,
இந்தோனேசிய கடற்படை தற்போது நீர்மூழ்கி மீட்க முடியாத அதாவது சுமார் 700 மீட்டர் ஆழத்திற்கு சென்றிருக்கலாம் என கூறியுள்ளது.
இந்தோனேசிய கடற்படை செய்தி தொடர்பாளர் ஜூலியஸ் விட்ஜோஜோனோ அளித்த பேட்டி ஒன்றில் நங்காலா 500மீ ஆழம் வரை இயங்க வடிவமைக்கப்பட்ட கப்பல் எனவும்,
அதற்கும் அதிகமான ஆழத்தில் அந்த கப்பலின் ஹல் பேராபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்றார்.
வல்லுனர்களும் இதையே கூறுகின்றனர், நங்காலா கப்பலானது கடலடியில் அதிக அழுத்தம் காரணமாக நொறுங்கி இருக்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும்,
அப்படியே கப்பல் தாக்குப்பிடித்தால் கூட நேரம் செல்ல செல்ல ஆக்ஸிஜன் பற்றாக்குறை வீரர்களின் உயிர் இழப்பிற்கு வழிவகுக்கும் என கூறுகின்றனர்.
மேலும் அனைத்து மீட்பு வாகனங்கள் மற்றும் அமைப்புகளும் 600 மீட்டர் ஆழம் வரையே இயங்கும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.