விகாரமாகும் சீன பிலிப்பைன்ஸ் பிரச்சனை

  • Tamil Defense
  • April 17, 2021
  • Comments Off on விகாரமாகும் சீன பிலிப்பைன்ஸ் பிரச்சனை

ஃபிலிப்பைன்ஸ் அரசு சீன தூதரை நேரில் வரவழைத்து விட்சுன் ரீஃப் பிரச்சினைக்காக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் விட்சுன் ரீஃப் பகுதியில் இருந்து சீனா வெளியேற தனது அரசுக்கு அழுத்தம் கொடுக்கமாறும் ஃபிலிப்பைன்ஸ் அரசு சீன தூதரிடம் கூறியுள்ளது.

சீன தூதர் ஹூ சிலியானை நேரடியாக அழைத்து ஃபிலிப்பைன்ஸ் வெளியுறவு துறை இணை செயலர் எலிசபெத் புவன்சுகேசோ ஜூவான் ஃபிலிப்பே ரீஃப் (விட்சுன் ரீஃப் சீனா வைத்த பெயர்) பகுதியில் இருந்து சீன கலன்கள் வெளியேறும்படி கூறியுள்ளார்.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சொந்தமான விட்சுன் பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான படகுகளில் சீன ஆதரவு குழுவினர் மற்றும் சீன கடலோர காவல்படை கலன்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இதற்கு விளக்கமளித்த சீனா கடல் சீற்றம் காரணமாக சீன கலன்கள் இந்த பகுதியில் ஒதுங்கி உள்ளதாகவும், மேலும் இந்த பகுதி தனக்கு உரியது ஆஇவே தனது கடலோர காவல்படை அஙகுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஆனால் அந்த பகுதியில் காலநிலை சீராக உள்ளதாக செயற்கை கோள் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.