அணு ஆயுதங்களை பெற முயற்சிக்கிறதா உக்ரேன் ??

  • Tamil Defense
  • April 17, 2021
  • Comments Off on அணு ஆயுதங்களை பெற முயற்சிக்கிறதா உக்ரேன் ??

தற்பாதுகாப்புக்காக உக்ரைன் அணு ஆயுதங்களை பெற முயற்சிக்கலாம் !!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது, எல்லையில் ரஷ்யா பல லட்சம் வீரர்களை குவித்துள்ளது.

இந்த நிலையில் ஒரு பக்கம் ரஷ்யா மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் உக்ரைனும் தன்னால் இயன்றதை முயன்று வருகிறது.

அந்த வகையில் நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடாக இணைய உக்ரைன் அதி தீவிர முயற்சி செய்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஜெர்மனிக்கான ரஷ்ய தூதர் ஆண்டரி மெலனிக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உக்ரைன் செலன்ஸ்கி இரண்டு விஷயங்களை பரிசீலித்து வருவதாகவும்,

முதலாவது நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடாக இணைவது இரண்டாவது மீண்டும் அணு ஆயுதங்களை உருவாக்கி படையில் இணைப்பது ஆகியவை தான் இரண்டு விஷயங்கள் என்றார்.

ஏற்கனவே ரஷ்யா 2014ஆம் ஆண்டு உக்ரைனில் இருந்து க்ரைமியாவை கைபற்றிய நிலையில், தற்போது ரஷ்ய ஆதரவு குழுக்கள்,

கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிளில் குறிப்பிட்ட பகுதிகளை தங்களது கட்டுபாட்டில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.