
இங்கிலாந்தின் போர்க்கப்பல்கள் குழு HMS குயின் எலிசபெத் விமானம் தாங்கி கப்பல் தலைமையில் ஆபரேசன் டிப்ளாய்மென்டாக இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் வெளியுறவு கொள்கையின் ‘Indo-Pacific tilt’ என்ற கொள்கைக்கு ஏற்ப இங்கிலாந்து கடற்படையின் பெரிய கப்பலாக குயின் எலிசபெத் தலையில் போர்க்கப்பல்கள் குழு இந்தியா வருகின்றன.மேலும் இந்த குழு ஜப்பான்,சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளது.
மேற்கு பகுதி துறை முகங்களுக்கு வர உள்ள இந்த குழு இந்திய படைகளுடன் இந்திய பெருங்கடலில் போர் பயிற்சிகள் மேற்கொள்ளும்.
சுதந்திரமான கடற்பயணம் என்பதை முன்னிறுத்தியும் , நாடுகளுடனான கடற்சார் உறவுகளை மேம்படுத்தவும் இந்த பயணங்களை மேற்கொள்கிறது இங்கிலாந்து கடற்படை.