பாகிஸ்தானை அதிக ஆபத்தான பட்டியலில் சேர்த்த நாடு காரணம் என்ன ??

இங்கிலாந்து அரசு பாகிஸ்தானை அதிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது, இந்த பட்டியலில் மொத்தமாக 21 நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு, பண பரிமாற்ற மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இங்கிலாந்து இந்த பட்டியலில் சேர்த்து உள்ளது.

இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது, பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹஃபீஸ் சவுதிரி இந்த நடவடிக்கை அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் இங்கிலாந்து அரசானது இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் கூறினார்.

இந்த பட்டியலில் உள்ள நாடுகளாவன;
அல்பேனியா, பார்படாஸ், போட்ஸ்வானா, பர்கினா ஃபாஸோ, கம்போடியா, கேமன் தீவுகள், கானா, வடகொரியா, ஈரான், ஜமைக்கா, மொராக்கோ, மியான்மர், நிகாரகுவா, பாகிஸ்தான், பனாமா, செனிகல், சிரீயா, உகாண்டா, ஏமன் மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை ஆகும்.