
சியாச்சினில் உள்ள இராணுவ நிலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஹனீப் சப்செக்டாரில் ரோந்து சென்ற வீரர்கள் மீது ஏற்பட்ட பனிச்சரிவில் வீரர்கள் மற்றும் போர்ட்டர்கள் சிக்கியுள்ளனர்.சிக்கிய வீரர்களை மீட்கும் பணி உடனடியாக துவங்கப்பட்டது.ஆனால் அதில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துவிட்டனர்.
பனியில் சிக்கிய மற்ற வீரர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.இந்த மாதத்தில் மட்டும் இது மூன்றாவது சம்பவம் ஆகும்.கடந்த ஏப்ரல் 14ல் இது போன்றதொரு பனிச்சரிவில் சிக்கி ஒரு ஜேசிஓ வீரமரணம் அடைந்தார்.