ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் ஒர் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளன.
இந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் ஆம்கா விமானத்தின் சோதனை வடிவ தயாரிப்பில் ஈடுபட உள்ளன.
ஆம்கா சிறப்பு பயன்பாட்டு வாகன திட்டத்தின் கீழ் வரும், இந்த திட்டத்தின்படி இரண்டு தனியார் நிறுவனங்களும் 25% மற்றும் அரசு 75% நிதி பங்களிப்பை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்கா திட்ட இயக்குனர் ஏ.கே.கோஷ் முதலாவது ஆம்கா சோதனை விமானம் 2024ஆம் ஆண்டு வெளிவந்து 2025ஆம் ஆண்டு சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும்,
இரண்டாவது ஆம்கா சோதனை விமானமானது 2026ஆம் ஆண்டு வெளிவரும் எனவுமீ அவர் கூறினார்.
பாதுகாப்பு துறையால் கருப்பு பட்டியலில் வைக்கப்படாத, சந்தையில் முன்னேற்றம் கண்டு வரும் தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தை அணுக தகவல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.