இந்திய ஃபிரான்ஸ் அமீரக முத்தரப்பு கடற்படை பயிற்சி !!

வருகிற ஞாயிற்றுக்கிழமை முதலாக இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படைகள் பஙாகேற்கும் முத்தரப்பு கடற்படை பயிற்சி துவங்க உள்ளது.

வருணா கடற்படை பயிற்சியானது கடந்த 1993 முதல் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையே நடைபெறும் கடற்படை போர் பயிற்சிகள் ஆகும்.

இந்த வருடம் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரக கடற்படையும் பங்கேற்க உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

இந்த பயிற்சிகள் பெர்சியன் வளைகுடா பகுதியில் நடைபெற உள்ளது, இந்த பயிற்சிகள் மூன்று நாட்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபிரான்ஸ் கடற்படை சார்பில் சால்ஸ் டி காவ்ல் விமானந்தாங்கி தாக்குதல் படையணி வர உள்ளதுஅமீரக கடற்படை பற்றிய தகவல்கள் இல்லை.

அதே நேரத்தில் இந்தியாவின் விக்ரமாதித்யா பராமரிப்பில் உள்ளதால், இந்தியா மூன்று நாசகாரி கப்பல்கள், ஃப்ரிகேட்கள், தாக்குதல் நீர்மூழ்கி மற்றும் பி8ஐ விமானம் ஆகியவற்றை அனுப்ப உள்ளது.

சால்ஸ் டி காவ்ல் கடந்த மார்ச் மாதமே அரேபிய கடலுக்கு வந்து ஆஃப்கானிஸ்தான் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமின்றி,

அமெரிக்க கடற்படையின் ட்வைட் டி ஐஸன்ஹோவர் விமானந்தாங்கி தாக்குதல் படையணியுடன் கூட்டு பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.