1 லட்சம் விலை ; சரணடைந்த நக்சல் தளபதி !!

சட்டீஸ்கர் மாநிலத்தில் நான்கு நக்சலைட்டுகள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்து உள்ளனர்.

சரணடைந்த நால்வரும் பீமா மட்காம், அயாத்து குன்ஜம், ரமேஷ் குன்ஜம் மற்றும் தேவ பாஸ்கர் ஆகியோர் ஆவர்.

இவர்களில் பீமா மட்காம் முக்கிய நக்சலைட் தளபதி ஆவான் இவனது தலைக்கு சுமார் 1 லட்சம் ருபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இவன் தேர்தல் இடையூறு, கண்ணிவெடி தாக்குதல் மற்றும் வாகன எரிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவன் ஆவான்.

அரசின் மறுவாழ்வு திட்டங்களால் ஈர்க்கப்பட்டு சமுகத்துடன் இணைந்து வாழ விரும்பியதால் சரணடைந்ததாக அவர்கள் கூறினர்.