விரைவில் மூன்று முன்னனி போர்கலன்கள் படையில் இணைப்பு !!

  • Tamil Defense
  • April 28, 2021
  • Comments Off on விரைவில் மூன்று முன்னனி போர்கலன்கள் படையில் இணைப்பு !!

இந்திய கடற்படை விரைவில் மூன்று மிக முக்கியமான முன்னனி போர்க்கப்பல்களை படையில் இணைக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவையாவன, 45,000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல், 7500 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் நாசகாரி கப்பல் மற்றும் 6000 டன் எடையுள்ள ஐ.என்.எஸ். அரிகாட் அணு ஆயுத அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகும்.

ஐ.என்.எஸ். விக்ராந்த் கொச்சியிலும், ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் மும்பையிலும், ஐ.என்.எஸ். அரிகாட் விசாகப்பட்டினத்திலும் கட்டுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவை மூன்றுமே இந்திய கடற்படையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டங்களின் பகுதியாகும், மூன்று திட்டங்களுமே அதிநவீன திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் வலிமை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.