
இலகுரக தேஜாஸ் என்.பி.5 விமானம் முதலாவது சோதனை ஒட்டத்திற்கு தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானமானது கடற்படை இரட்டை என்ஜின் விமானத்தின் தொழில்நுட்பங்களை சோதிக்க பயன்படும் என்பது கூடுதல் தகவல்.
என்.பி-1, என்.பி-2 மற்றும் என்.பி-5 ஆகிய விமானங்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே என்.பி-1, என்.பி-2 ஆகிய விமானங்கள் ஏற்கனவே 18 முறை பறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்க கடற்படைக்கான பயிற்சி ஜெட் விமான ஒப்பந்தத்திற்கு இந்த என்.பி-5 விமானம் அனுப்பி வைக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.