காலக்கெடுவுக்கு முன்னரே தயாராகும் தைவான் போர் விமானம் !!

தைவானுடைய தேசிய சங் ஸான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அடுத்த தலைமுறை போர் விமான திட்டம் வேகமடைந்து உள்ளதாக கூறியுள்ளது.

டிசைன் மற்றும் என்ஜின் தயாரிப்பு ஆகிய முதல் இரண்டு கட்ட பணிகளும் 2024ஆம் ஆண்டு நிறைவு பெறும் எனவும்,

அதே ஆண்டிலேயே மற்ற 24 முக்கிய தொழில்நுட்பங்களுக்கான பணிகள் நிறைவடையும் என கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு முறையே 8.8 பில்லியன் மற்றும் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கூறப்படுகிறது.

இது தென்கொரியாவின் விமான திட்டத்திற்கு ஆகும் செலவை ( 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மிகவும் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.