அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் தைவான் !!

  • Tamil Defense
  • April 3, 2021
  • Comments Off on அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் தைவான் !!

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை தைவான் விமானப்படை வாங்க உள்ளதா அறிவித்துள்ளது.

எதிரிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தைவான் விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீன விமானப்படை தொடர்ந்து தைவான் நாட்டின் எல்லைக்குள் வான் பாதுகாப்பு அடையாள பகுதிகளுக்குள் அடிக்கடி அத்துமீறுவதும் குறிப்பிடத்தக்கது.

பேட்ரியாட் அமைப்பின் அதிநவீன ரகமான பேட்ரியாட்-3 அமைப்பை வாங்க உள்ளதாகவும் ஆனால் எத்தனை அமைப்புகள் வாங்கப்படும் என்பது பற்றிய தகவல் இல்லை.

இந்த அமைப்புகள் வருகிற 2025ஆம் ஆண்டு முதல் டெலிவரி செய்யப்படும் அதற்கு அடுத்த வருடமே அவை நிலைநிறுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.