புதிய பாதுகாப்பு அமைப்பை பெறும் டி90 “பீஷ்மா” டாங்கி !!

  • Tamil Defense
  • April 15, 2021
  • Comments Off on புதிய பாதுகாப்பு அமைப்பை பெறும் டி90 “பீஷ்மா” டாங்கி !!

நமது தரைப்படை பயன்படுத்தி வரும் டி90 பீஷ்மா டாங்கிகளுக்கு புதிய பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தரைப்படை முடிவு செய்து டென்டர் விட்டுள்ளது.

இந்த டென்டரில் பாதுகாப்பு அமைப்பானது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஹீட் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி ஆகியவற்றிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட பட்டுள்ளது.

மேலும் ஒரு ரேடார், ட்ராக்கர் மற்றும் அகச்சிவப்பு கேமரா ஆகியவை இருக்க வேண்டும் எனவும், தாக்க வரும் ஏவுகணைகளை கேமரா மற்றும் ரேடார் முலம் முன்கூட்டியே அறிந்து ட்ராக்கர் முலம் அதன் இருப்பிடத்தை அறிந்து அதை அழிக்க வேண்டும்.

சாஃப்ட் கில் மற்றும் ஹார்ட் கில் ஆகிய இரண்டு முறைகளிலும் இநாத பாதுகாப்பு அமைப்பானது செயல்பட வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.

இதற்கு மூன்று கட்ட சோதனைகள் நடைபெறும் அவற்றில் கிடைக்கும் முடிவை பொறுத்தே சிறந்த பாதுகாப்பு அமைப்பு தேர்வு செய்யப்படும்.

ஆகவே நமது டி90 பீஷ்மா டாங்கிகள் மேலும் அதிக சக்தி வாய்ந்தவையாக உருமாற்றம் அடைய உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடியும்.