இந்திய கடற்படைக்கான தயாராகும் சூப்பர் கல்வரி !!

  • Tamil Defense
  • April 13, 2021
  • Comments Off on இந்திய கடற்படைக்கான தயாராகும் சூப்பர் கல்வரி !!

கடந்த வருடம் இந்திய கடற்படை வெளியிட்ட காணொளி ஒன்றில் வந்த சில நொடி காட்சி தற்போது பாதுகாப்பு வட்டாரங்களை ஈர்த்துள்ளது.

அதாவது தற்போது ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் கூட்டு தயாரிப்பான கல்வரி ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை நமது கடற்படையில் இணைத்து வருகிறோம்.

ஆனால் இதை விட பெரிய வித்தியாசமான சூப்பர் கல்வரி எனும் நீர்மூழ்கி கப்பலின் வரைபட காட்சி இடம் பெற்று இருந்தது தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சூப்பர் கல்வாரி 100 மீட்டருக்கும் அதிகமான நீளமும், 3000 டன்கள் எடையுடனும் சாதாரண கல்வரியை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

மேலும் இதில் எட்டு நீர்மூழ்கி ஏவு கருவிகளும் உள்ளன அவற்றில் பிரம்மாஸ் அல்லது நிர்பய் ஏவுகணைகள் பொருத்தப்படலாம்.

ஆனால் இன்னும் சில வாரங்களில் பி75ஐ நீர்மூழ்கி திட்டம் அறிவிக்கப்படும் நிலையில் இந்த சூப்பர் கல்வரி நீர்மூழ்கி கப்பல் எப்போது தயாரிப்பு நிலையை எட்டும் என எந்தவித தகவலும் கிடைக்க பெறவில்லை.

எது எப்படியோ சமீபத்தில் நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தி வரப்படும் லித்தியம் ஐயான் பேட்டரிகள் மற்றும் ஏ.ஐ.பி அமைப்புகள் வருங்காலத்தில் இந்தியா சொந்தமாக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கலன்களை தயாரிக்கலாம் என்பதை உணர்த்துகிறது.