
கான்பூரில் உள்ள Defence Materials and Stores Research and Development Establishment என்ற
டி.ஆர்.டி.ஓ ஆய்வகம் 9.0 கிலோ எடையுள்ள லைட் வெயிட் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை (பிபிஜே) உருவாக்கியுள்ளது.
ஃப்ரண்ட் ஹார்ட் ஆர்மர் பேனல் (FHAP) ஜாக்கெட் சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (TBRL) சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒவ்வொரு கிராம் எடை குறைப்பும் சிப்பாயின் வசதியை அதிகரிப்பதில் முக்கியமானது ஆகும்.
இந்த தொழில்நுட்பம் நடுத்தர அளவிலான ஆடையின் எடையை 10.4 கிலோவிலிருந்து 9.0 கிலோவாக குறைக்கிறது.
இந்த நோக்கத்திற்காக ஆய்வகங்களில் மிகவும் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் செயலாக்க தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இலகுரக உடையை மேம்படுத்தியமைக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் அறிவியலாளர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.