நாகலாந்தில் சிறப்பு படைகள் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அதிரடி ஆபரேஷன் !!

  • Tamil Defense
  • April 24, 2021
  • Comments Off on நாகலாந்தில் சிறப்பு படைகள் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அதிரடி ஆபரேஷன் !!

நேற்று இரவு நாகலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் இந்திய தரைப்படையின் சிறப்பு படைகள் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அதிரடி ஆபரேஷன் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அலகேஷ் சைக்கியா மற்றும் மோகினி மோகன் கோகோய் எனும் இரண்டு ஒ.என்.ஜி.சி ஊழியர்கள் பயங்கரவாதிகளால்

அஸ்ஸாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள லகுவா எண்ணெய் கிணறு பகுதியில் இருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.

ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் கடத்தபட்ட நிலையில் அந்த வாகனத்தை அஸ்ஸாம் நாகலாந்து எல்லையோரம் நிமோனாகர் காட்டுபகுதியில் விட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து தரைப்படையின் 21ஆவது சிறப்பு படை பட்டாலியன் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அதிரடி ஆபரேஷன் நடத்நி இருவரையும் மீட்டனர், அங்கிருந்து 1 ஏகே47 துப்பாக்கியும் கைபற்றப்பட்டது.

21ஆவது சிறப்பு படை பட்டாலியன் தான் 2016ஆம் ஆண்டு மியான்மரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய படையணி என்பது குறிப்பிடத்தக்கது.