
சமீபத்தில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் சூஹ் வோக் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்தார், இங்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது இந்தியாவுக்கு இலகுரக டாங்கி தயாரிக்க உதவ தென்கொரியா விரும்புவதாக குறிப்பிட்டார்.
K9 வஜ்ராவை தயாரித்த ஹான்வஹா நிறுவனம் K21 எனும் இலகுரக டாங்கியை தயாரித்துள்ளது.
இந்தியா சீன எல்லையோரம் பயன்படுத்த இலகுரக டாங்கிகளை தேடி வருகிறது, K9 வஜ்ரா சேஸில் 120மில்லிமீட்டர் துப்பாக்கி பொருத்தி பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.
அந்த நிலையில் தென்கொரியாவின் இந்த ஆஃபர் குறிப்பிடத்தக்கது, தற்போது இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திட்டம் உறுதியானால் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனமும் ஹான்வஹா நிறுவனமும் இணைந்து செயல்படுவர் என கூறப்படுகிறது.