தனது சொந்த விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பும் சிங்கப்பூர்
1 min read

தனது சொந்த விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பும் சிங்கப்பூர்

இந்தியாவிற்கு முக்கிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வேகமாக அனுப்ப தனது விமானப்படை விமானங்கள் இரண்டை களமிறக்கியுள்ளது சிங்கப்பூர்.

கடந்த வருடம் சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலகம் முழுதும் உள்ள நாடுகளுக்கு இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் செய்தது.தற்போது உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது.

சிங்கப்பூர் விமானப்படையின் இரு சி-130 மூலம் 256 ஆக்சிஜன் சிலிண்டர்களை சிங்கப்பூர் அனுப்பியுள்ளது.

இது தவிர இந்திய விமானப்படையின் சி-17 விமானங்கள் மூலம் ஏற்கனவே கிரையோஜெனிக் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன.

உலகம் முழுதும் இப்போது வரை 15 நாடுகள் இந்தியாவிற்கு உதவிவருகின்றன.