
சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் 22 துணை ராணுவ படையினர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலின் முளையாக மாத்வி ஹித்மா எனும் நக்சல் தளபதி செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்வி ஹித்மா 40-45 வயது நிரம்பியவன் எனவும் இவன் மீது சட்டீஸ்கர் மாநில அரசு 40 லட்ச ருபாய் பரிசு தொகையினை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களை உள்ளடக்கிய தண்டகாரண்யா பகுதியில் இயங்கி வருகிறான்.
இந்த பகுதியில் மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் முதலாவது பட்டாலியனை வழிநடத்தி வருகிறான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
இவன் வேறு பல தாக்குதல்களிலும் தொடர்புடையவன் ஆவான், முதல்முறையாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற டத்மேலா தாக்குதலுக்கு பிறகு இவன் மீது கவனம் திரும்பியது.
தற்போது மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைகள் ஹித்மா உள்ளிட்ட பல நக்சல் தலைவர்களுக்கு தீவிர பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களை கைது செய்தாலோ அல்லது கொன்றாலோ நக்சல் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.