
கடந்த 24மணி நேரத்தில் தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் இந்திய ஆயுதப்படைகள் ஆபத்தான பயங்கரவாத குழு அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) ஐ முற்றிலுமாக அழித்துள்ளன.
ஷோபியனில் வியாழக்கிழமை மாலை தொடங்கிய என்கௌன்டர் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.இதில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். இரண்டாவது நடவடிக்கையில் AGuH இன் தலைவர் இம்தியாஸ் ஷா உட்பட இரண்டு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
பயங்கரவாதிகளிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை இராணுவ வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.ஏழு ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் பிஸ்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.