விரைவில் இந்தியா வருகிறது எஸ்400 !!

இந்தியாவுடனான எங்கள் நட்பு மிகவும் வலுவானது எஸ்400 ஒப்பந்தத்தில் நாங்கள் வலுவான பங்களிப்பை தருவோம் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷெவ் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதறை அவர் தெரிவித்தார் மேலும் பேசுகையில் இரு தரப்பும் எஸ்400 ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

விரைவில் அதாவது இந்த ஆண்டு இறுதியில் எஸ்400 அமைப்புகளின் டெலிவரி துவங்க உள்ளதாக மூத்த ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடாஷெவ் பேசும் போது இந்தியா ரஷ்யா இடையிலான நட்புறவு சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது,

இரு நாடுகளும் இந்த நட்புறவில் ஆழமான நம்பிக்கை அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை கொண்டுள்ளதாக அவர் கூறினார்