திங்கட்கிழமை அன்று ரஷ்ய பொறியாளர் ஒலெக் ஃபிலிப்போவ் ஆக்ராவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தனது அறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்க பட்டார்.
55 வயதான ஒலெக் ஃபிலிப்போவ் ஆக்ரா விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை பொறியாளர்களுக்கு சுகோய்30 போர் விமான பராமரிப்பு பயிற்சிகளை அளித்து வந்தார்.
ஒலெக் உடன் அலெக்ஸான்டர் க்ராம்ஸ்டோவ் எனும் மற்றொரு ரஷ்ய பொறியாளரும் இந்தியா வந்திருந்தார், ஒரே விடுதியில் பக்கத்து அறைகளில் இருவரும் தங்கி இருந்தனர்.
திங்கட்கிழமை அன்று அலெக்ஸான்டர் அழைத்து நீண்ட நேரமாகியும் ஒலெக் வராத நிலையில் ஒட்டல் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்த போது இறந்த நிலையில் இருந்தார்.
அவரது நெற்றியில் இருந்து ரத்தம் கசிந்து இருந்தது காவல்துறையினர் இயற்கையாக மரணமடைந்து கிழே விழுந்த போது நெற்றியில் காயம் ஏற்பட்டு இருக்கும் என கருதுகின்றனர்.
ஒலெக் ஃபிலிப்போவின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்ட நிலையில் ரஷ்ய தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நீர்மூழ்கி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய பொறியாளர் க்ராசேவ் டிமித்ரி தனது அறையில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.