இந்தியாவுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை விற்க ரஷ்யா விருப்பம் !!

  • Tamil Defense
  • April 12, 2021
  • Comments Off on இந்தியாவுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை விற்க ரஷ்யா விருப்பம் !!

ரஷ்யாவை சேர்ந்த பிரபல நீர்மூழ்கி கப்பல் வடிவமைப்பு நிறுவனமான ரூபின் டிசைன் பியூரு இந்தியாவுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை விற்க விருப்பம் தெரிவித்துள்ளது.

பாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் பாதி கப்பல் மற்றும் பாதி நீர்மூழ்கி கப்பலாகும் இரண்டின் தன்மையையும் ஒருசேர பெற்றிருக்கும்.

இது 1000 டன்கள் எடை, 60 முதல் 70 மீட்டர் நீளமும், 42 வீரர்களும் பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆளில்லா விமானம், நீரடிகணைகள், சிறிய வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், தானியங்கி துப்பாக்கி, படகுகள் ஆகியவையும் இருக்கும்.