50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட படைகுவிப்பு மேற்காசியாவில் போர் வெடிக்குமா ??
1 min read

50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட படைகுவிப்பு மேற்காசியாவில் போர் வெடிக்குமா ??

50 வருடங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்யா சுமார் 5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது.

சர்வதேச பார்வையாளர்கள் உக்ரைன் போரின் விளிம்பு நிலையில் இருப்பதாகவும் பனிப்போர் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு பிரமாண்ட படைகுவிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது போராக வெடித்தால் அமெரிக்கா தலையிட்டாலும் ரஷ்யா அமெரிக்கா உடன் போரை அறிவிக்க தயங்காது எனவும் கூறுகின்றனர்.

இன்று கருங்கடல் பகுதியில் ரஷ்ய கடற்படை போர் பயிற்சிகளை துவங்கி உள்ளது, அதே நேரத்தில் இங்கு படைகளை அனுப்பவிருந்த அமெரிக்கா படைகளை அனுப்பவில்லை.

நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொலென்பெர்க் ரஷ்யா உடனடியாக படைகுவிப்பை நிறுத்து வேண்டும் என கூறியுள்ளார்.

உக்ரைனும் அவ்வப்போது போர் பயிற்சிகளை மேற்கொண்டாலும் ரஷ்யாவின் வலிமையை எதிர்கொள்வது கடினம் என கூறப்படுகிறது.

மேலும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உடனான மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தனி ப்ளிங்கின்ஸ் 30 நேட்டோ பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.