பாகிஸ்தானுக்கு தளவாடங்கள் விற்கும் ரஷ்யா !!

பாகிஸ்தானுக்கு சமீபத்தில் இரண்டு நாள் சுற்றுபயணமாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் சென்றுள்ளார்.

இவர் தனது இந்திய சுற்றுபயணத்தை முடித்த கையொடு பாகிஸ்தான் சென்றுள்ளது குறிப்பிட தகுந்த விஷயமாகும்.

அங்கு அவர் பேசும்போது பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்பில் உதவ ரஷ்யா தயாராக உள்ளதாக கூறினார் அதற்கான ஆயுதங்களை வழங்க உள்ளதாகவும் கூறினார்.

ரஷ்யா ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதை அடுத்து தனது பங்களிப்பை அதிகபடுத்த விரும்புகிறது இதற்கு பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதற்கு முன்னர் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது ரஷ்யா மேலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் மாஸ்கோவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா ஏற்கனவே பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகோர் வரை ஒரு எரிபொருள் குழாயை அமைத்து வருகிறது.

அந்த நிலையில் பாகிஸ்தான் தனது ரயில்வே கட்டமைப்பை நவீனபடுத்த ரஷ்யாவிடம் உதவி கோரியதோடு மட்டுமின்றி,

சுமார் 50 லட்சம் ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்புசிகளை வாங்கவும் பின்னர் பாகிஸ்தானிலேயே அதை தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது.