உத்ரகண்ட் கிளாசியர் வெடிப்பு; முழுவீச்சு மீட்பு பணியில் இராணுவம்

உத்ரகண்டின் சமோலி மாவட்டத்தில் நிடி சமவெளி பகுதியில் வெள்ளி அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.காவல் துறை தகவல்படி இன்னும் எட்டு பேரை காணவில்லை.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இராணுவம் வெளியிட்ட தகவல்படி, வெள்ளி அன்று மாலை 4 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து நடைபெற்ற மீட்பு பணியில் முதலாக 55 பேர் மீட்கப்பட்டனர்.அதன் பிறகு எல்லைச் சாலை அமைப்பின் கேம்பில் சிக்கியிருந்த 150 ரிசர்வ் என்ஜினியர் படையினர் மீட்கப்பட்டனர்.

அதன் பிறகு காலநிலை மோசமானதை தொடர்ந்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு அடுத்த நாள் காலை மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.அதன் பிறகு 93 பேர் மீட்கப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது.