துபாயில் ரா மற்றும் ஐ.எஸ்.ஐ ரகசிய சந்திப்பு ??

  • Tamil Defense
  • April 17, 2021
  • Comments Off on துபாயில் ரா மற்றும் ஐ.எஸ்.ஐ ரகசிய சந்திப்பு ??

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவின் ரா மற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, காஷ்மீர் விவகாரத்தால் இரண்டு நாடுகளும் மூன்று முறை போரிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஃபெப்ரவரி மாதம் இரு நாடுகளும் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தம் இந்த சந்திப்பின் விளைவாக ஏற்பட்டது என கூறப்படுகிறது.

இரு நாடுகள் இடையேயான உறவுகள் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் இந்த செய்தி ஆச்சரியம் அளிக்கிறது.