
இந்திய விமானப்படை சமீபத்தில் 60கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட ஹாம்மர் ஏவுகணையை சோதனை செய்தது.
இந்த சோதனையில் வெற்றிகரமாக செங்குத்தாக பாய்ந்து பங்கர் ஒன்றை முற்றிலுமாக தாக்கி அழித்தது.
ரஃபேலின் வருகை இந்தியாவுடனான எல்லையோரம் சீனா மற்றும் பாகிஸ்தானுடைய பாதுகாப்பு கொள்கைகளை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு உதாரணமாக சீன விமானப்படை தனது ஐந்தாம் தலைமுறை விமானமான ஜே-20 போர் விமானத்தை நிலைநிறுத்தி உள்ளது.
அதை போல பாகிஸ்தான் விமானப்படையும் தனது ஜே.எஃப்-17 விமானத்தை இந்திய எல்லையோரம் நிலை நிறுத்தி உள்ளது.
இதற்கு காரணமாக ஹாம்மர் ஏவுகணையை மட்டும் குறிப்பிட முடியாது. ஸ்கால்ப், மிட்டியோர், மைக்கா போன்ற ஆயுதங்களும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
நிச்சயமாக மேலதிக ரஃபேல் போர் விமானங்கள் படையில் இணைந்தால் எல்லையோரம் பாதுகாப்பு பன்மடங்கு வலுப்பெறும் என்பது உறுதியே !!