
தலைநகர் தில்லியில் நடைபெற்று வரும் ரெய்சினா மாநாட்டில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் பங்கேற்று பேசினார், அவருடன் அமெரிக்க கடற்படையின் இந்தோ பசிஃபிக் பிராந்திய தளபதி அட்மிரல் ஸ்காட் டேவிட்சன் கலந்து கொண்டார்.
அங்கு பேசிய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் தேவை ஏற்படும் பட்சத்தில் க்வாட் நாடுகளின் கடற்படைகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்றார்.
மேலும் பேசுகையில் அமெரிக்க கடற்படையை போல விமானந்தாங்கி கப்பல் படையணிகளை சீனா வேகமாக உருவாக்கி வருகிறது.
ஆனால் விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதற்கான அனுபவம் பெற நீண்ட காலம் ஆகும் அமெரிக்காவோ இரண்டாம் உலகப்போரில் இருந்தே இந்த போர்முறையில் தேர்ந்த நாடு என்றார்.
இந்தோ பசிஃபிக் பிராந்தியம் கிழக்காசியாவிற்கு மிகவும் முக்கியமானது அதுவும் சீனாவுக்கு உயிர்நாடி ஆகும் ஆகவே சீனா தனது ஆதிக்கத்தை இந்திய பெருங்கடலில் நிலைநாட்ட முயற்சி செய்யும்.
பிரமாண்டமான இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தை பாதுகாப்பது எந்த ஒரு தனி நாடாலும் முடியாது ஆகவே இந்த விஷயத்தில் அதிக ஒத்துழைப்பு அவசியமாகிறது என்றார்.
அட்மிரல் ஸ்காட் மோரிசன் பேசும் போது இன்றைய காலகட்டத்தில் சீனா மிகப்பெரும் சவாலாக உருவெடுத்து உள்ளது ஆகவே க்வாட் அமைப்பின் செயல்பாடு மிகவும் முக்கியமானது என்றார்.