இந்தியா டுடேவில் சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில் இந்திய கடற்படை தனது 6 எதிர்கால நீர்மூழ்கிகளுக்கான பணிகளை துவக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களிலும் பம்ப் ஜெட் அமைப்பு மற்றும் 150 மெகாவாட் நீரழுத்த அணு உலை இருக்கும் என கூறப்படுகிறது.
அதே போல எஸ்-5 ரக பலிஸ்டிக் ஏவுகணை அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களிலும் அணு உலை தவிர்த்து இதே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களும் 2032ஆம் ஆண்டு முதல் படையில் இணைய தொடங்கும் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல்கள் 6000 டன் எடையுடன் இருக்கும் இவற்றில் 100 வீரர்கள் பணியாற்ற முடியும் மேலும் இவை 35 நாட் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கப்பல்களில் 533மிமீ நீரடிகணைகள் மற்றும் ஏவுகுழாய்கள், 1200கிமீ செல்லும் பிரம்மாஸ்-2 ஏவுகணைகள் மற்றும் 2500கிமீ செல்லும் நிர்பய் க்ருஸ் ஏவுகணைகள் ஆகிய ஆயுதங்கள் இருக்கும்.
எஸ்-5 ரக பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் 13,500 டன் எடையுடன் அமெரிக்காவின் விர்ஜினியா ரக நீர்மூழ்கிகளுக்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.
டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை விடவும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களுக்கு பம்ப்ஜெட் அமைப்பு ஏற்றது,
காரணம் இந்த கபபல்களில் அணு உலையில் இருந்து வரும் அளவற்ற சக்தி அதிக வேகத்தில் செல்ல உதவும் மேலும் வழக்கமான ப்ரோப்பலர்களை விட சத்தமின்றி இயங்க உதவும் இதனால் எதிரி சோனார் அமைப்புகளில் சிக்காது.
இந்த பம்ப்ஜெட் தொழில்நுட்பத்தில் ஃபிரான்ஸ் உதவலாம், அந்நாட்டின் நேவல் க்ருப் முன்னனியில் உள்ளது ஏற்கனவே தனது பேரக்குடா மற்றும் ட்ரையம்ஃபான்ட் ரக நீர்மூழ்கி கப்பல்களில் இதனை பயன்படுத்தி உள்ளது.
இந்திய கடற்படை எஸ்-5 ரக பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களுக்கு புதிய 190 மெகாவாட் அணு உலையை தயாரிக்க பாபா அணு ஆராய்ச்சி மையத்திடம் கேட்டு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.