
சமீபத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் மீது நடைபெற்ற கொடுர தாக்குதலை அடுத்து மத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் குல்தீப் சிங் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மிகவும் ஒதுக்குபுறமான இடங்களில் கூட பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்துள்ளனர்.
ஐந்து பட்டாலியன்கள் புதிதாக களமிறக்கப்பட்டதும், பஸகுடா, சில்கர், ஜகர்குண்டா மற்றும் மின்பா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புதிய முகாம்கள் நக்சல்களை வெறுப்படைய செய்துள்ளதாகவும்,
அதன் விளைவாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதன்மூலம் பாதுகாப்பு படையினரை பயமுறுத்தி விடலாம் என அவர்கள் கருதுவதாகவும் கூறினார்.
மேலும் பேசுகையில் என்ன நடந்தாலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து முன்னேறி கொண்டே இருப்பார்கள் அது நிச்சயம் என்றார்.
சுமார் 1500 வீரர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.