பணம் இல்லாததால் இந்தியாவுடன் அமைதியை விரும்பும் அண்டை நாடு !!

  • Tamil Defense
  • April 20, 2021
  • Comments Off on பணம் இல்லாததால் இந்தியாவுடன் அமைதியை விரும்பும் அண்டை நாடு !!

ஏற்கனவே பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் இந்தியாவுடன் அமைதியை பேண விரும்புகிறது.

எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அதிக அளவில் ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது அதனால் அதிக செலவும் ஏற்படுகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த ஊடகவியலாளர் மற்றும் புவிசார் அரசியல் நிபுணர் நஜாம் சேத்தி பாகிஸ்தான் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் பணவீக்கம் காரணமாக பட்ஜெட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை,

மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் தாகாகுதல் நடத்துவது மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது ஆகவே அமைதி பேண விரும்புவதாக கூறுகிறார்.

மேலும் மற்றொரு பாகிஸ்தான் ஊடகவியலாளரும் புவிசார் அரசியல் நிபுணருமான மொசின் பிர்ஸாதா பேசும் போதுபாகிஸ்தான் ராணுவம் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளதாகவும்,

அதே நேரத்தில் இந்தியா சுமார் 2 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளதாகவும், ஆனால் பாகிஸ்தானால் இந்தியாவை போல செலவு செய்ய முடியாது என கூறுகிறார்.

பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் தரப்பில் இருந்து இந்தியாவை நோக்கி அடிக்கடி அமைதிக்கான சிக்னல் வருவதும் குறிப்பிடத்தக்கது.