
ஆஃப்கானிஸ்தானில் பல ஆண்டுகள் போர் முடிவுக்கு வந்து அந்நாடு அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் மெல்ல நகர்ந்து வருகிறது.
இதனை உறுதிபடுத்த பல உலக நாடுகள் பல்வேறு வகையான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் உளவுத்துறையான தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் துணை தலைவர் நசர் அலி வாஹிதி அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆஃப்கானிஸ்தானில் போரை துவங்க தலிபான்களை தூண்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
முக்கிய தலிபான் தளபதிகள் மற்றும் தலிபான் ஆதரவு நிழல் ஆளுனர்கள் பாகிஸ்தானுடைய பெஷாவர் நகருக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறினார்.
மேலும் ஆஃப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் பல மாகான தலைநகரங்களை கைபற்றும் திட்டங்கள் பற்றிய துப்பு கிடைத்துள்ளதாக கூறி உள்ளன.
ஆஃப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளின் தகவல்படி கடந்த சில நாட்களில் மட்டுமே சுமார் 20 மாகாணங்களில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே சண்டை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.