Breaking News

ONGC பணியாளர்களை கடத்திய பயங்கரவாதிகள்; அதிரடி காட்டிய பாதுகாப்பு படை

  • Tamil Defense
  • April 24, 2021
  • Comments Off on ONGC பணியாளர்களை கடத்திய பயங்கரவாதிகள்; அதிரடி காட்டிய பாதுகாப்பு படை

நாகலாந்தின் அருகே உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் கடத்திய மூன்று ONGC பணியாளர்களை அதிரடி ஆபரேசன் நடத்தி பாதுகாப்பு படைகள் இருவரை மீட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் இந்த மூன்று பேரும் கடத்தப்பட்டுள்ளனர்.நாகலாந்து எல்லையில் இருவரை மீட்ட பிறகு தற்போது மூன்றாவது பணியாளரை மீட்க தேடுதல் பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருவதாக அஸ்ஸாம் காவல் துறை தலைவர் பாஸ்கர் ஜோதி மகாந்தா கூறியுள்ளார்.

சிவாசாகர் மாவட்டத்தில் லக்வா எண்ணெய் வயலில் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்களை உல்பா பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் அவர்களை மீட்க என்கௌன்டர் நடந்தது.இதனை அடுத்து இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆபரேசனை நாகலாந்து காவல்துறை,இந்திய இராணுவம் மற்றும் பாராமிலிட்டரி படைகள் இணைந்து நடத்தியுள்ளன.