ஒரு வீரரை இன்னும் காணவில்லை; தேடும் பணி தீவிரம்

  • Tamil Defense
  • April 4, 2021
  • Comments Off on ஒரு வீரரை இன்னும் காணவில்லை; தேடும் பணி தீவிரம்

சனியன்று நக்சல்கள் உடன் மோதலில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த 22 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு வீரரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வீரரை தேடும் பணியில் தற்போது வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.கோப்ரா படைப் பிரிவை சேர்ந்த வீரர் ஒருவரை காணவில்லை.அவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

அதே போல சண்டையில் போது காணாமல் போன 7 AK-47s, 1 LMG மற்றும் 2 SLRs துப்பாக்கிகளை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

சண்டையில் காயமடைந்த 31 வீரர்களும் ராய்பூரிலும் பிஜப்பூரிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்கள் உடல் நலம் நன்றாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 2 முதல் DRG, CRPF, STF மற்றும் கோப்ரா கமாண்டோ வீரர்கள் மாவோயிஸ்டு எதிர்ப்பு ஆபரேசன்களுக்காக நிலைநிறுத்தப்பட்டிருந்தன.இந்த பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசனில் டாரேமை சேர்ந்த 760 வீரர்களும் உசுரை சேர்ந்த 200 வீரர்கள் பாமேடை சேர்ந்த 195 வீரர்களும் மின்பாவை சேர்ந்த 483 வீரர்களும் நர்சாபூரை சேர்ந்த 420 வீரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மொத்தம் மூன்று மணி நேரம் இந்த சண்டை நடைபெற்றுள்ளது.நக்சல்களுக்கு பயங்கர சேதம் விளைவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.