வடகொரியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கிறதா ??

  • Tamil Defense
  • April 12, 2021
  • Comments Off on வடகொரியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கிறதா ??

வட கொரியா அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்கும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்டி வருவதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகியவை சந்தேகிக்கின்றன.

அமெரிக்க மற்றும் தென் கொரிய உளவு அமைப்புகள் வடகொரியா சுமார் 3000 டன்கள் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பலை 2019ஆம் ஆண்டு கட்டி முடித்துள்ளதாக நம்புகின்றன.

அதை போல கடந்த வருடம் வட கொரிய தலைநகரில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் ஏவுகணை காட்சிபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கான அடுத்தகட்ட சோதனைகளுக்கும் வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.