
சத்திஸ்கரில் நக்சல்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஐந்து சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.10 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 250 நக்சல்கள் நமது வீரர்களை தாக்கியுள்ளனர்.இந்த ஆபரேசனில் 30 கோப்ரா வீரர்களும்,60 மாவட்ட ரிசர்வ் படையினரும் ,120 சிஆர்பிஎப் வீரர்களும் கலந்துள்ளனர்.ஒன்பது நக்சல்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சத்திஸ்கரின் பிஜப்பூரில் டாரேம் எனும் பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இந்த மோதல் நடைபெற்றுள்ளது.
ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை சத்திஸ்கரின் டிஜிபி அஸ்வதி அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.