
மே மாதம் 8 அல்லது 9 ரஃபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த மாதம் முதலாவது ரஃபேல் படையணி முழு எண்ணிக்கையை எட்டும் என கூறப்படுகிறது, தற்போது 14 விமானங்கள் உள்ள நிலையில் இனியும் 4 விமானங்கள் தேவைப்படுகிறது.
இந்த மாத இறுதியில் ஹஸிமாரா படைத்தளத்தில் இரண்டாவது ரஃபேல் படையணி செயல்பாட்டுக்கு வர உள்ளது அதுவும் இந்த வருடமே முழு எண்ணிக்கையை எட்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்கள் இந்தியா வருகையில் ஐக்கிய அரபு அமீரக விமானப்படை எரிபொருள் நிரப்பி உதவ உள்ளது கூடுதல் தகவல் ஆகும்