சீனாவுக்கு எதிராக புதிய மலையக பீரங்கிகள் வாங்க ஆர்வம் காட்டும் தரைப்படை !!

  • Tamil Defense
  • April 3, 2021
  • Comments Off on சீனாவுக்கு எதிராக புதிய மலையக பீரங்கிகள் வாங்க ஆர்வம் காட்டும் தரைப்படை !!

புதிய பீரங்கிகள் வாங்க ஆர்வம் காட்டும் தரைப்படை !!

இந்திய தரைப்படை லாரியில் இணைத்து பயன்படுத்தும் வகையிலான பிரங்கிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.

தற்போது இதனை உறுதிபடுத்தும் வகையில் இவ்வகை பிரங்கிகளுக்கான தகவல் அறியும் கோரிக்கையை விடுத்துள்ளது.

155மிமீ/52 காலிபர் திறன் கொண்டதாகவும், சமவெளி,மலைகள், அதிக உயர் பகுதிகள், பாலைவனங்கள், வறண்ட பகுதிகள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும்,

மேலும் இவ்வகை பிரங்கிகள் தற்போது தரைப்படை பயன்படுத்தி வரும் அனைத்து வகை குண்டுகள் மற்றும் ஆர்டரில் உள்ள குண்டுகள் ஆகியவற்றை சுடுவதற்கு ஏதுவாகவும்,

அதிநவீன இலக்கு குறிவைத்தல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டி அமைப்புகளுடன் அனைத்து வகையான சாலைகளிலும் இயங்கும் வகையிலும் இருக்க வேண்டும் எனவும்,

அதில் உள்ள தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பானது இரவு மற்றும் பகல் தாக்குதலுக்கு உதவும் வகையிலும் ஷக்தி அமைப்புடன் இணைந்து செயல்படும் வகையிலும் இருக்க வேண்டும் என தரைப்படை விரும்புகிறது.

தற்போது இந்திய தரைப்படைக்கு இத்தகைய 814 அமைப்புகள் தேவை, முதல்கட்டமாக 200 அமைப்புகள் வாங்கப்படும் மீதமுள்ள அமைப்புகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனுஷ் மற்றும் ஏடாக்ஸ் அமைப்புகளை லாரியில் இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும் ஆனால் தரைப்படையின் நிபந்தனைகளை இவை இரண்டும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.